ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமை மற்றும் சிறிலங்கா அரசின் தமிழ் இனஅழிப்பு எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு வரும் மே 5 மற்றும் 6 இரு நாட்களாக கால்ற்றன் பல்கலை கழகத்தில் இடம்பெறுகிறது. உலகில் பல பாகங்களிலிருந்து புகழ் பெற்ற இருபத்தைந்திட்கும் மேலான புலமைசார் அறிவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்கிறார்கள். 1999 இல் ஒட்டாவாவில் நடைபெற்ற முதலாவது மாநாட்டின் தொடர்ச்சியாக கடந்த 20 வருட கால தமிழர்களின் தியாகம் வீரம் குருதி தோய்ந்த வரலாற்றை கல்விசார் உலகிற்கும் மற்றும் உலக தேசங்களுக்கு தமிழர்களின் ஆவணமாகவும் குரலாகவும் இந்த மாநாடு அமைகிறது.
ஒட்டாவா கால்ற்றன் பல்கலைகழக சமூக மற்றும் கலை பீடம், அமெரிக்க நியூயார்க் Colin Powell கல்லூரி, மற்றும் டொரோண்டோ யார்க் பல்கலைகழக கலை பீடம் ஆகியன இந்த மாநாட்டிற்கு தமது ஆதரவை வழங்குகின்றன.
மொன்றியல் McGill பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், Concordia பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், கால்ற்றன் பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், தமிழ் இளையோர் அமைப்பு, ஒட்டவா பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், கனடிய தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் Wilrid Laurier தமிழ் மாணவர் அமைப்பு ஆகியன ஆதரவை வழங்குகின்றன.
கனடிய மற்றும் உலக தமிழர்களின் ஆதரவுடன் ஏழு தமிழ் அமைப்புக்கள் இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கமைக்கின்றர்கள். உலகில் ஈழ தமிழர்களுக்காக குரல் தரும் பல தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்ற உள்ளனர். கடந்த ஒரு வருட காலமாக இந்த மாநாட்டு ஒழுங்குகளை குயூபெக் தமிழ் அபிவிருத்தி ஒன்றியம், மிச்சிசகா தமிழ் ஒன்றியம், ஒட்டாவா தமிழ் ஒன்றியம், கனடிய தமிழர் தேசிய அவை, பிரம்ப்டன் தமிழ் ஒன்றியம், நாடு கடந்த தமிழீழ அரசு – கனடா, மற்றும் கனடிய தமிழர் சமூக அமையம் ஆகியன ஒருங்கே மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மாநாடு சிறக்க உலகத்தமிழர்களின் பங்களிப்பை எதிர் பார்கின்றார்கள். மேலதிக மாநாட்டு விபரங்களை https://tamilconferences.org/ எனும் இணையத்தில் பெறலாம்..
காலை 9 மணி முதல் மழை 6 மணிவரை சனி ஞாயிறு May 5, 6 ஆகிய இரு நாட்களும் ஐந்து பகுதிகளாக மாநாடு நடைபெறும். பௌத்த சிங்கள இனவெறியும் அதன் விளைவுகளும், மனித உரிமை மீறல்கள் நீதிக்கான தேவை, சிறிலங்காவின் தமிழ் இன அழிப்பு, ஈழ தமிழர் தேச மீள்கட்டுமாணம், மற்றும் எதிர்கால செயல்பாடுகள் எனும் தலைப்புகளில் ஆய்வு, அறிவு சார் கருத்தரங்கு மற்றும் ஆவணபடுத்தல் இடம்பெறவுள்ளது.