About admin

This author has not yet filled in any details.
So far admin has created 5 blog entries.

Upcoming Conference Statement: Liberation Struggle for Tamil Self-determination: 20 Years After

Liberation Struggle for Tamil Self-determination: 20 Years After The Importance of the Delisting of LTTE for the Exercise of Socio-political Equality for Global Tamil Diaspora Marking 20 years since the 2002 Norwegian facilitated Ceasefire agreement between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and Government of Sri Lanka (GOSL) on 22 February 2002, the Canadian Tamil organizations are hosting a conference that will focus on: The impact and consequence of the listing of LTTE as a terrorist organization, a movement that was fighting in defence of the right to Self-determination of Eelam Tamils. The prolonged extension of the listing of LTTE as a terrorist organization despite the movement having ceased its operations in 2009. Understanding that the continuous renewal of the ban that stigmatizes and discriminates against the whole Tamil diaspora that has been fighting for the rights of Tamils in Eelam using democratic means. Ever since the British colonial rulers left Ceylon in 1948, Tamils have been subjected to periodic pogroms resulting in the killing of thousands and thousands of innocent Tamil civilians. In 1976, after three decades of failed non-violent protests against the genocide perpetrated by the GOSL, Tamils chose through a democratic process to establish an independent state of Tamil Eelam. This democratic mandate of the Tamils in 1976-77 was countered by the Sinhalese-led governments [...]

By |2024-01-09T17:21:40+00:00September 12th, 2021|

மகாநாடு: தமிழர் சுயநிர்ணயத்திற்கான விடுதலைப் போராட்டம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு

தமிழர் சுயநிர்ணயத்திற்கான விடுதலைப் போராட்டம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகளாவிய புலம் பெயர் தமிழரின் சமூக, அரசியல் சமத்துத்துவத்தை நடைமுறைப் படுத்தவதற்காகப் பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்குவதன் முக்கியத்துவம். 2002 ஆம் ஆண்டு; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் இலங்கை அரசுக்கும் (GOSL) இடையே நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, கனேடிய தமிழ் அமைப்புகள் ஒரு மகாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இம் மகாநாடு கீழ்காணும் விடயங்களைக் கவனத்தில் எடுத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டதன் தாக்கமும் அதன் விளைவும். 2009 ல், விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களை மௌனித்ததன் பின்பும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலின் கீழ் தடை நீடிப்பு தொடர்தல். ஈழம் வாழ் தமிழர் உரிமைகளுக்காகப் புலம்பெயர்ந்த நாடுகளில் சனநாயக அடிப்படையில் போராடி வரும் தமிழர்கள் மேல், விடுதலைப் புலிகளின் மீதான தடை தொடர்ந்து புதுப்பித்தல் ஏற்படுத்தும் களங்கத்தையும் மற்றும் பாகுபாட்டையும் புறக்கணிப்பையும் புரிந்துகொள்ளல். 1948 இல் பிரிட்டிஷ் குடியேற்ற ஆட்சியாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதிலிருந்து, அப்பாவித் தமிழ் பொதுமக்கள், அவ்வப்போது திட்டமிடப்பட்ட படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் விளைவாக ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். மூன்று தசாப்தங்களாக, இன அழிப்புக்கு எதிரான, தொடர் அகிம்சைப் போராட்டங்கள் தோல்வியுற்ற நிலையில், 1976-77 ஆம் ஆண்டில், தமிழர், தம் பூர்வீக நிலமான வடக்கு-கிழக்கு இணைந்த தமிழீழம் எனும் நாட்டை, சனநாயக முறையில் உருவாக்க முடிவு செய்தனர். சனநாயக அடிப்படையில் தமிழரால் வழங்கப்பட்ட உறுதியான இந்த ஆணையானது, 1977, 1981, மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில், தமிழருக்கு எதிரான விரோதப் படுகொலைகளை, மறைமுகமாக ஊக்குவித்ததன் மூலம் சிங்களத் தலைமையிலான அரசுகளால் எதிர் கொள்ளப்பட்டது. அகிம்சை வழியிலான அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்கள் மீது, தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த, பெரும்பான்மைச் சிங்களவர்களைக் கொண்ட இராணுவத்தினால் பெரும் எண்ணிக்கையிலான கைதுகள், சித்திரவதைகள், கண்மூடித்தனமான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இது தமிழ் மக்களின் ஆதரவுடன், சர்வதேச மட்டத்தில், தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக இலங்கை [...]

By |2024-01-09T17:21:47+00:00September 12th, 2021|

கனடா தலைநகர் ஒட்டாவாவில் தமிழரின் ஒருமித்த குரலாக இரண்டாம் சர்வதேச மாநாடு

ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமை மற்றும் சிறிலங்கா அரசின் தமிழ் இனஅழிப்பு எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு வரும் மே 5 மற்றும் 6 இரு நாட்களாக கால்ற்றன் பல்கலை கழகத்தில் இடம்பெறுகிறது. உலகில் பல பாகங்களிலிருந்து புகழ் பெற்ற இருபத்தைந்திட்கும் மேலான புலமைசார் அறிவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்கிறார்கள். 1999 இல் ஒட்டாவாவில் நடைபெற்ற முதலாவது மாநாட்டின் தொடர்ச்சியாக கடந்த 20 வருட கால தமிழர்களின் தியாகம் வீரம் குருதி தோய்ந்த வரலாற்றை கல்விசார் உலகிற்கும் மற்றும் உலக தேசங்களுக்கு தமிழர்களின் ஆவணமாகவும் குரலாகவும் இந்த மாநாடு அமைகிறது. ஒட்டாவா கால்ற்றன் பல்கலைகழக சமூக மற்றும் கலை பீடம், அமெரிக்க நியூயார்க் Colin Powell கல்லூரி, மற்றும் டொரோண்டோ யார்க் பல்கலைகழக கலை பீடம் ஆகியன இந்த மாநாட்டிற்கு தமது ஆதரவை வழங்குகின்றன. மொன்றியல் McGill பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், Concordia பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், கால்ற்றன் பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், தமிழ் இளையோர் அமைப்பு, ஒட்டவா பல்கலை கழக தமிழ் மாணவர் ஒன்றியம், கனடிய தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் Wilrid Laurier தமிழ் மாணவர் அமைப்பு ஆகியன ஆதரவை வழங்குகின்றன. கனடிய மற்றும் உலக தமிழர்களின் ஆதரவுடன் ஏழு தமிழ் அமைப்புக்கள் இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கமைக்கின்றர்கள். உலகில் ஈழ தமிழர்களுக்காக குரல் தரும் பல தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்ற உள்ளனர். கடந்த ஒரு வருட காலமாக இந்த மாநாட்டு ஒழுங்குகளை குயூபெக் தமிழ் அபிவிருத்தி ஒன்றியம், மிச்சிசகா தமிழ் ஒன்றியம், ஒட்டாவா தமிழ் ஒன்றியம், கனடிய தமிழர் தேசிய அவை, பிரம்ப்டன் தமிழ் ஒன்றியம், நாடு கடந்த தமிழீழ அரசு - கனடா, மற்றும் கனடிய தமிழர் சமூக அமையம் ஆகியன ஒருங்கே மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மாநாடு சிறக்க உலகத்தமிழர்களின் பங்களிப்பை எதிர் பார்கின்றார்கள். மேலதிக மாநாட்டு விபரங்களை https://tamilconferences.org/ எனும் இணையத்தில் பெறலாம்.. காலை 9 மணி முதல் மழை 6 மணிவரை சனி ஞாயிறு [...]

By |2024-01-09T17:21:53+00:00July 19th, 2018|

கனடாவில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள தமிழர் மாநாடு

தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்கும் விடுதலைக்குமான உலகத்தமிழ் மாநாடு இம்முறை கனடாவில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது. இது குறித்த நிகழ்வுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் ஏழாம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கனடிய தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து, உலகமெங்கும் பரவி வாழும் தமிழினத்தின் ஒருமித்த குரலாக, ஒட்டாவாவில் பல்நாட்டு அறிவு சார்ந்தோர் பங்கெடுக்கும் நிகழ்வில் ஒவ்வொரு தமிழனும் இணைந்து கொள்வது எங்கள் வரலாற்றுக் கடமையாகும். எமது உறவுகள் ஆயிரம் ஆயிரமாக 2009ம் ஆண்டு அழிக்கப்பட்டபோது, கனடிய நாடாளுமன்றம் முன்பாக 30,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் போராடினார்கள். ரொறோன்டேவில் 80,000க்கும் அதிகமான மக்கள் போராட்டம் நடாத்தினார்கள். அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மிகமுக்கியமான பெரும் வீதியை முற்றுகையிட்டு தாங்க முடியாத துயரத்தை வெளிப்படுத்திளார்கள். அன்று நாமும் எம்மில் நம்பிக்கை வைத்திருந்த தாயக உறவுகளும் தோற்றுப்போனோம். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், இலங்கை அரசின் உறுதிமொழிகளும், எவற்றையும் நடைமுறைப்படுத்தாது ஏமாற்றும் போக்கும், நல்லிணக்கம் எனக் கூறிக்கொண்டு, தடுத்து வைக்கப்பட்ட தமிழர்களை இரகசிய முகாம்களில் வைத்து சித்திரவதை செய்தும், ஆண்டுக்கணக்காக சிறைகளில் அடைத்து வைத்தும், ஆயிரக்கணக்கான தமிழர்களின் பாரம்பரியமான காணிகளை இராணுவம், கடற்படையினர் அபகரித்து வைத்துக்கொண்டும் இனப்பிரச்சனைக்கான அடிப்படைத் தீர்வுகளைக் கூட ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றது இலங்கை அரசு. இம்மாநாட்டின் இரு நாட்களும் ஐந்து அரங்குகளில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும். பௌத்த சிங்கள இனவெறியும் அதன் விளைவுகளும், மனித உரிமை மீறல்கள் நீதிக்கான தேவை, இலங்கையின் தமிழின அழிப்பு, ஈழ தமிழர் தேச மீள்கட்டுமானம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் எனும் தலைப்புகளில் ஆய்வு, அறிவு சார் கருத்தரங்கு மற்றும் ஆவணப்படுத்தல் போன்றவை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் ஓட்டாவாவிலுள்ள கார்ல்ரன் பல்கலைக்கழகத்தில் சுய நிர்ணய அடிப்படையில் தாயகம், இனப்படுகொலை, சர்வதேச விசாரணை, மீள்கட்டுமானம் போன்ற தலைப்புகளில் உலகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு மன்றங்களில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்தவர்கள், ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் உணர்வுபூர்வமாக செயற்பட்டவர்கள் என 30க்கு மேற்பட்ட புலமை மிகுந்த அறிஞர்கள் பங்கு கொள்ளும் இவ்வாய்வு மாநாட்டில் பங்காளார்களாக உங்களை [...]

By |2024-01-09T17:21:59+00:00July 19th, 2018|

Academic conference is much needed to document Tamil strugle

Eelam Tamil Struggle has 70 years long history, however there were only few formal academic conferences conducted in the past in order to document and analyze. In 1999, the conference in Ottawa held in May from 21th and 22nd with more than 20 academic papers and proceedings were released in October. The proceedings, more than 300 pages book consists of many submitted papers, discussion summary and conclusion. 1999 Ottawa conference served many purposes, and one of them is to study and explain the Tamil struggle via academic perspective at that time. Even after 20 years, still most of the 1999 Ottawa conference papers (http://tamilnation.co/conferences/cnfCA99/index.htm) remains valid. Since  1999, the first 10 years had several peace talks between Tamil leadership and Sri Lankan government under Norway’s facilitation, Tamil leadership proposal for federal based solution and Tamils having a functioning de-facto State Tamil Eelam. Tamil leadership was eliminated and several war crimes and crimes against humanity committed by Sri Lankan government in 2009. The 10 years from 1999 to 2009 was significant history that includes living as De-facto State with dignity, desperate times, and Genocide and it remains in Tamil’s memory in the world and keep reminds for justice. Even though several UN resolutions, many documentaries, political conferences, and books written by authors, a formal academic conference still a pending. [...]

By |2024-01-09T17:22:06+00:00July 7th, 2018|
Go to Top